மகிந்தவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மொட்டு எம்.பிக்கள்
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தாங்களும் பொதுஜன பெரமுனவின் குழுவும் தீர்மானித்துள்ளதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் பெரும்பான்மையானவர்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில், கட்சியினால் வேறு ஒரு வேட்பாளரை முன்மொழிந்தால் அது கட்சியின் வாக்காளர் தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
எனவே கட்சியில் இருந்து வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியுடன் கலந்துரையாடி விரைவில் முடிவெடுப்பேன் என மகிந்த விளக்கமளித்துள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |