பொலிஸ் மா அதிபரின் சிக்கலுக்கு நீதிமன்றமே தீர்வளிக்க வேண்டும்: சபாநாயகர் திட்டவட்டம்
புதிய இணைப்பு
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று (26) விளக்கமளித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் இதன்போது கூறியுள்ளார்..
தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்ட விரோதமானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
ஜனாதிபதியினால் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு தற்போது சட்டத்தில் இடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பணி
பொலிஸ் மா அதிபரின் பணியை இடை நிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவினை செல்லுபடியற்றதாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு இந்த விடயத்தை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் இந்த விவகாரம் தொடர்பில் கூடிய விரைவில் தலையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு பேரவை
தற்போதைய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானத்தை அரசியல் அமைப்பு பேரவை எடுத்துள்ளது எனவும் இதனை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைக்க முடியாது எனவும் அரசியல் அமைப்பு பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்பு எவ்வித சட்ட அடிப்படையும் கொண்டதில்லை எனவும் இது சட்ட விரோதமானது எனவும் இந்த உத்தரவினை நாடாளுமன்றினால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |