தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றம் அவசியம் : ரணில் தெரிவிப்பு
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது என்பதோடு இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (25) ஆரம்பமான 'கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்' ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போட்டி நிறைந்த பொருளாதாரம்
மேலும் தெரிவிக்கையில், "கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் செய்த பணிகளை நான் நினைவு கூற வேண்டியதில்லை. ஆனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக மேலும் அதிகமாக அந்நியச் செலாவணி தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவேதான் அடுத்த தசாப்தத்தில் நாட்டை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நிகர பூச்சிய உமிழ்வை அடையும் இலக்கை எட்டிய மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட அதிக போட்டி நிறைந்த பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும்.
இன்று விவாதிக்கப்படும் இந்த சட்டமூலத்தில் அதனுடன் தொடர்புடைய கோட்பாடுகள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.
இதபோது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்“ எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |