மகிந்த தரப்பு வேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இறுதித் தீர்மானம்
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை(29) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
