யாருக்கும் அடிபணிய மாட்டோம் – அமெரிக்காவிற்கு ஸ்பெயின் கடும் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குத் தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ள ஸ்பெயின், தாங்கள் அமெரிக்காவின் "வசால்கள்" (Vassals - குறுநில மன்னர்கள் அல்லது அடிபணிந்தவர்கள்) கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் துணைப் பிரதமர் மரியா ஜேசஸ் மான்டெரோ, "நாங்கள் யாருக்கும் அடிபணிந்து நடக்க மாட்டோம்.
ஆபத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு! எதிரிகளின் தீமையை தடுக்கும் வரை நிறுத்த மாட்டோம் .. ஈரானின் பகிரங்க அறிவிப்பு
உலகளாவிய பேரழிவு
எந்தவொரு அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்கள் விழுமியங்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் இந்த மறுப்பைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட;ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்னதாக உரையாற்றிய ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் (Sanchez), இந்த மோதல் ஒரு மிகப்பெரிய உலகளாவிய பேரழிவைத் தூண்டும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.
ஒருவரின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து, உலகிற்குத் தீமை விளைவிக்கும் அல்லது தங்கள் நாட்டின் நலன்களுக்கு மாறான ஒரு செயலில் தாங்கள் ஒருபோதும் கூட்டாளியாக இருக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri