புதியவரை பிரதமராக நியமிக்கும் செய்தி தொடர்பில் வெளியான செய்தி பதில்
ரணிலுக்கு பதில் புதியவரா?
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவித்ததாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (SLPP) மற்றும் பிரதமர் அலுவலகமும் மறுத்துள்ளன.
இந்த செய்தியை வெளியிட்டுள்ள கொழும்பின் ஊடகம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சாகர காரியவசத்தின் பதிலையும் பதிவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனாதிபதியினால், தனிப்பட்ட முறையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது.
எவ்வாறாயினும், அத்தகைய நடவடிக்கை இருந்தால், முதலில் கட்சிக்கு அறிவிக்கப்பட வேண்டும்,
எனினும் கட்சி என்ற வகையில் அத்தகைய அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை இல்லை
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என வினவிய போது, அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வேறு சில பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரும், ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான செய்தி பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளார்.
பதவியேற்ற அடுத்த நிமிடம் ரணில் வெளியிட்ட முதலாவது அதிரடி அறிவிப்பு! - எடுத்துக்கொண்ட சபதம்
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri