அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் சாடல்

SLPP Anura Kumara Dissanayaka Ministry of Consumer Protection Dengue Prevalence in Sri Lanka Prisons in Sri Lanka
By Rakesh Jul 07, 2026 08:05 PM GMT
Report

தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மரணங்கள் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் தோல்விகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று(06.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.

கைதிகளின் பாதுகாப்பு 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான சுஜித் புஷ்பகுமார இதன் போது கருத்துரைக்கையில், 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் கவலையளிக்கின்றது.

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் சாடல் | Slfp Slams Government Failures

இன்று ஜனாதிபதியாக இருக்கும் அநுரகுமார திஸாநாயக்க, அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசினார்.

சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் பாதுகாப்பு அரசின் பொறுப்பாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் இவ்வாறு மரணமடையும் போது அதற்கு யார் பொறுப்பேற்பது?

இந்த நிலைமையை ஜனாதிபதி இன்று நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெருமளவிலான கைதிகள் தற்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் பரவல் 

தங்களைப் பாதுகாக்குமாறு கோரி நேற்று பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்.

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் சாடல் | Slfp Slams Government Failures

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மொரட்டுவை பகுதியில் இந்த நோய் தீவிரமடைந்துள்ளது.

இவ்வாறானதொரு ஆபத்தான சூழலிலும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் டெங்கு ஒழிப்பை முன்னிறுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வரை காத்திருக்காமல், அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசின் செயற்றிட்டங்கள்

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜா - எல தொகுதியின் அமைப்பாளர் ரங்க கொடிதுவக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய அரசு டெங்குவை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு வெறும் ஊடகக் காட்சிகளை மட்டுமே நடத்தி வருகின்றது.

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் சாடல் | Slfp Slams Government Failures

கடந்த காலங்களில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் டெங்கு ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இறங்கின.

ஆனால், தற்போதைய அரசிடம் அதுபோன்ற எந்தவொரு தயார்நிலையோ அல்லது முறையான வேலைத்திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, சிறைச்சாலைகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலையை மேம்படுத்தி கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு ஆபத்திலிருந்து மக்களை மீட்பதற்கும் அரசு வெறும் விளம்பரங்களை விடுத்து, உடனடியாகத் தலையிட்டு முறையான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US