சுதந்திரக்கட்சி சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் என தகவல்
விரைவில் அமைக்கப்பட உள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து அதில் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களில் 5 பேர் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து விட்டனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்துள்ளனர். தற்போது அந்த கட்சியில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து பொறுப்புகளை பெற்று, அரசங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக பேசப்படுகிறது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam