இணைய மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டித்வா பேரிடர் காரணமாக மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண பணத்தை இணையத்தில் மாற்றும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வலியுறுத்தியுள்ளது.
இணையத்தில் தொடர்ந்து மோசடிகள் இடம்பெறுவதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரண நிதி மோசடி
டித்வா பேரிடர் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய இழப்பை ஈடுச்செய்ய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி மோசடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நன்கொடையாளர்களை ஏமாற்றிய பல போலி வலைத்தளங்கள் அடையாளம் காணப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப்பிரிவு (CERT/SLCERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அத்துடன், பண்டிகை காலத்தில் பரிசு வென்றதாகக்கூறும் மோசடியான தொலைபேசி செய்திகளுக்கு எதிராக பொதுமக்களை எச்சரித்த அவர், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.