காத்தான்குடியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழப்பு
மட்டக்களப்பு - காத்தான்குடி வாவியில் நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த முதலை, இன்று (27.12.2025) அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதலை உயிரிழப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக்கடிக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
அத்துடன், மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனை உள்ளிட்ட விலங்குகளையும் இழுத்துச்சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இராட்சத முதலையைப் பிடிப்பதற்கு, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம், காத்தான்குடி நகர சபை உன்ன வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சித்த நிலையிலும் பிடிக்க முடியாமல் போயுள்ளது.
சுமார் 18 அடி நீளமுள்ள இந்த முதலையினால் வாவியோரத்தில் வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.



