மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதோடு தொடரையும் கைப்பற்றியுள்ளது.
குறித்த போட்டி இன்றையதினம் (17.10.2024) தம்புள்ளையில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.
இலகுவான வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளின் சார்பாக ரோமன் பவல் 37 ஓட்டங்களை பெற்றார். சிறப்பாக பந்துவீசிய வனிந்து ஹஸரங்க 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து இலகுவான வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 68 மற்றும் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மென்டிஸும் தொடரின் நாயகனாக பதும் நிஸங்கவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான ஒரு நாள் தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
