கம்ரான் குலாமின் அதிரடி சதம்: வலுவான நிலையில் பாகிஸ்தான் அணி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கம்ரான் குலாமின் அதிரடி சதத்தின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்துள்ளது.
சுற்றுலா இங்கிலாந்நு அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் படுதேல்வியை அடைந்திருந்தது.
இரண்டாவது டெஸ்ட்
இதனை தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வை வழங்கி மாற்றங்களுடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இதில் பாகிஸ்தான் அணி சார்பில் கம்ரான் குலாம் 118 ஓட்டங்களையும், சயிம் அயுப் 77 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்கு பெற்றுக்கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி
இதில் இங்கிலாந்து அணி சார்பில், ஜெக் லீச்ஸ் அதிகபட்சமாக 2 விக்கட்டுக்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam