முன்னணி வீரர்கள் வெளியேற்றம்: இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
அணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னணி வீரர்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஷான் மசூத்
3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.
இந்நிலையில் முதல் போட்டியில் பெரிதும் பிரகாசிக்காத முன்னணி வீரர்களான பாபர் ஹசாம், ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ஷான் மசூதின் கீழ் தொடர்ச்சியாக ஆறு தோல்விகளை அந்த அணி சந்தித்துள்ளது.
மேலும், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணில் எவ்வித தொடர்களையும் பாகிஸ்தான் அணி வெற்றிக்கொள்ளவில்லை.
வெற்றியற்ற தொடர்
இவ்வாறான வெற்றியற்ற தொடர்களுக்குப் பிறகு, அணியை மறுசீரமைஷத்த தேர்வுக் குழு முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் இன்னிங்ஸின் ஆதிக்க நிலை குறித்து தீர்க்கமாக பதிலளித்தது.
சமீப ஆண்டுகளில் நாட்டின் கிரிக்கெட்டுக்கான சர்வதேச தரப்படுத்தலில் முன்னணி வகித்தவரும், தற்போதைய உலகின் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலாவது வீரருமான பாபர் பாபர் ஹசாமிற்கு எதிர்வரும் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு வழங்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |