அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூஸிலாந்து மகளிர் அணி
உலக கிண்ண 20க்கு20 மகளிர் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 54 ஓட்டங்களால் தோற்கடித்தது.
இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை பெற்றது
களத்தடுப்பில் பாகிஸ்தான் வீராங்கனைகள்
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
இதில் 5 பாகிஸ்தான் வீராங்கனைகள் ஓட்டமெதையும் பெறாமலேயே ஆட்டமிழந்தனர்.
அத்துடன் களத்தடுப்பின்போது பாகிஸ்தான் வீராங்கனைகள் 8 பிடியெடுப்புக்களையும் தவறவிட்டனர்.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி காரணமாக, ஓட்ட சராசரி விகிதத்தில் அரையிறுதிப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு இருந்த வாய்ப்பு தகர்ந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
