இலங்கை அணியை தோற்கடித்த மேற்கிந்திய தீவுகள் அணி
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
5 விக்கெட்டுக்கள்
இதில், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களையும், சரித் அசலங்க 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.

இதில், பிரன்டன் கிங் 63 ஓட்டங்களையும், எவின் லீவிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு20 போட்டி நாளையதினம் தம்புள்ளையில் நடைபெறவுள்ளதோடு மூன்றாவது போட்டி அக்டோபர் 17ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri