இந்திய மகளிர் அணியின் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானின் கைகளில்
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிருக்கான உலக கிண்ண 20க்கு20 போட்டிகளின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் இந்திய அணியை அவுஸ்திரேலிய அணி 9 ஓட்டங்களால் தோற்கடித்ததது.
இந்தநிலையில், இன்று பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மாத்திரமே, இந்தியாவுக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களின் முடிவில், 8 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் கிரேஸ் ஹரின் 40 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்திய மகளிர் அணி
இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோழ்வியை சந்தித்துள்ளது.
இதில் இந்திய மகளிர் அணியின் தலைவி ஹார்மன்பிரீட் கவுர் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்தாலும் இந்திய மகளிர் அணி, புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது.
மூன்றாவது நிலையில் நியூஸிலாந்து உள்ளது. எனவே இன்றைய போட்டியில் பாகிஸ்தானிய மகளிர் அணி வெற்றி பெற்றால் மாத்திரமே இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |