உலக கிண்ண 20க்கு20 மகளிர் போட்டிகளின் அரையிறுதி நாளை ஆரம்பம்
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் 20க்கு20 கிரிக்கட் உலக கிண்ண போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை ஆரம்பமாகின்றன.
இதன்படி முதலாவது அரையிறுதி ஆட்டம்,அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நாளை துபாயில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் 17ஆம் திகதியன்று சார்ஜாவில் நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டி
இறுதிப்போட்டி எதிர்வரும் 20ஆம் திகதியன்று துபாயில் நடைபெறவுள்ளது.
இதுவரையில் இடம்பெற்று வந்த போட்டி புள்ளிப்பட்டியலின்படி ஏ பிரிவில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 8 புள்ளிகளையும், நியூஸிலாந்து மகளிர் அணி 6 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
பி பிரிவில் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் தலா 6 புள்ளிகளை பெற்றுள்ளன.
சராசரி விகித அடிப்படை
எனினும் ஓட்ட சராசரி விகித அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டவில்லை.
இதேவேளை ஏ பிரிவில், இந்திய அணி 4 புள்ளிகளையும் பாகிஸ்தான் 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
பி பிரிவில் பங்களாதேஸ் அணி 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தநிலையில் இலங்கை அணி ஏ பிரிவில் எந்த புள்ளிகளையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |