மீண்டும் உயர்கிறது இலங்கை ரூபாவின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(16.10. 2024) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 217.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 208.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 390.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam