மீண்டும் அதிரடி காட்டும் மகிந்த
தென்னிலங்கை அரசியல் ஏற்பட்ட பாரிய மாற்றம் காரணமாக நிலைகுலைந்துள்ள ராஜபக்சர்கள், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் ஒட்டுமொத்த சிங்களவர்களின் ஆதரவை பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அரசியல் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் மகிந்த அறிவித்திருந்தார்.
முடிவை மாற்றிய மகிந்த
எனினும் அண்மைக்காலமாக அநுர அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு விமர்சனங்களின் பின்னணியில், மகிந்த தன் முடிவை மாற்றியுள்ளதுடன், அரசியல் ஓய்வையும் நிராகரித்துள்ளார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றிக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் இலகுவான வெற்றியை பெற முடியும் என்ற நம்பிக்கையை மகிந்த நேற்று வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தற்காலிய ஓய்வில் உள்ள போதும், அரசியல் இருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிரேஷ்ட அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிடாதவாறு விரட்டப்பட்டுள்ளதாகவும், அது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ராஜபக்சர்கள் மீண்டும் அரசியலில் பிரகாசிப்பர் என்றும் மகிந்த சூளுரைத்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
