ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியின் நான்காவது நாளான இன்றைய தினமே (05.02.2024) இந்த அபார வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ்
அதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் சதங்களுடன் முதல் இன்னிங்ஸில் 439 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இரண்டாம் இன்னிங்ஸ்
அதனையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

அதற்கமைய, 56 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 7.2 ஓவர்களில் இலக்கினை அடைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam