இலங்கை -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடயிலான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள்
இலங்கை -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 207 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இந்நிலையில் அஞ்சலோ மத்தியூஸ் 46 ஓட்டங்களுடனும் டினேஸ் சந்திமால் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        