புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிக்கு முல்லைத்தீவில் கௌரவிப்பு
முல்லைத்தீவு - கொக்கிளாய் அரச தமிழ் கலவன் பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கொக்கிளாய் அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்கும் மாணவி சு.அஷ்விக்காவுக்கே கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர் ஒருவரின் உவந்தளித்த நிதி அனுசரணையின் மூலம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கௌரவ நிகழ்வு
03.02.2024 அன்றைய நாளில் காலை 10.30 மணிக்கு கௌரவ நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சு.அஸ்விகா 161 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 145 ஆகும்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோரையும் க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தியடைந்தோரையும் ஒரு சேர நிகழவிருக்கும் கௌரவிப்பு நிகழ்வில் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக ஏற்பாட்டு குழுவின் சார்பில் பேசியவர் குறிப்பிட்டிருந்தார்.
கொக்கிளாய் பங்கின் அருட் தந்தை A.விமலநாதன், கண்ணகி அம்மன் ஆலய குரு சிவசிறி கிரிசாந் ஐயா ஆகியோர் ஆசியுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
மேலும், ஆரம்ப கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் இ.கணேசலிங்கம், இலக்கிய கலாநிதி தமிழருவி த.சிவகுமாரன், செம்மலை மகாவித்தியாலயத்தின் அதிபர் செ.யோகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரைகளையும் வழங்கவுள்ளனர்.
அத்தோடு, கொக்கிளாய் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்று என்பதும் நில ஆக்கிரபிப்புக்குள் அகப்பட்டுள்ள மண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |