சிட்னி தாக்குதலில் தலையில் சுடப்பட்ட இளம் பொலிஸ் அதிகாரி
சிட்னியின் போண்டி கடற்கரை பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தலையில் சுடப்பட்ட இளம் பொலிஸ் அதிகாரி, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிகழ்வு ஒரு 'அதிசயம்' என அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சிட்னியில் நடைபெற்ற யூதர்களின் ஹனுக்கா (Hanukkah) திருவிழாவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதான ஜெக் ஹிபர்ட் (Jack Hibbert), என்ற பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.
பணியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன நிலையில், இந்தத் தாக்குதலில் அவர் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்த போதிலும், தற்போது அவர் உடல்நலம் தேறி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வீடு திரும்பியுள்ளார்.
திட்டமிட்ட தாக்குதல்
கடந்த வாரம் போண்டி கடற்கரை பகுதியில் இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதலின் போது ஜெக் ஹிபர்ட் தலையிலும் தோள்பட்டையிலும் சுடப்பட்ட பின்னரும், தன்னால் இயன்றவரை அங்கிருந்த பொதுமக்களுக்கு உதவி செய்ததாக சக அதிகாரிகள் அவரது வீரத்தைப் பாராட்டியுள்ளனர்.
"ஆபத்தைக் கண்டு விலகிச் செல்லாமல், உதவி தேவைப்பட்டவர்களை நோக்கி அவர் ஓடினார்" என அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு அதிகாரியான ஸ்கொட் டைசன் (25) இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக நவீத் அக்ரம் (24) என்பவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவரது தந்தையான சஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்கள் இருவரும் IS அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பல மாதங்களாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan