ஏ.ஆர் ரஹ்மானிற்கு கனடாவில் கிடைத்த அங்கீகாரம்
தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் கனடாவில் தெருவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதிகளில், 2 இந்திய பிரபலங்களின் பெயரில் இரண்டு தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய சினிமா மற்றும் இசையின் உலகளாவிய தாக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் தெரு அமைக்கப்பட்டுள்ளது.
கலாசார நடவடிக்கை
பிராம்ப்டன், ஒன்ராறியோவில் இந்திய சினிமாவின் “ஷோமேன்” என அழைக்கப்படும் ராஜ் கபூரின் பெயரில் தெரு மற்றோரு அமைக்கப்பட்டுள்ளது.

பிராம்ப்டன் நகரம், பல்வேறு கலாசார பங்களிப்புகளை மதிக்கும் வகையில், தெரு பெயர்களில் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கனடாவில் சுமார் 2.88 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர்.
இந்த தெருக்கள், இந்திய சினிமா மற்றும் இசை, அந்நாட்டு நகர வாழ்க்கையின் நிலையான அடையாளமாக மாறியுள்ளதை காட்டுகின்றன.
சுற்றுலா இடங்களாக இல்லாவிட்டாலும், இவை கலாசாரச் சின்னங்களாக மதிக்கப்படுகின்றன.
எனவே, ராஜ் கபூர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த தெருக்கள், இந்திய கலைஞர்களின் உலகளாவிய தாக்கத்தையும், கனடாவின் பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan