மதுபோதையில் தள்ளாடிய பிரித்தானிய துடுப்பாட்ட வீரர்.. வெளியான காணொளி
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஏஷஸ் தொடரில் பங்கேற்றுள்ள, பிரித்தானிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பென் டக்கெட் மதுபோதையில் தள்ளாடும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு வரும் அந்த காணொளியில், டக்கெட் தனியாக நின்று கொண்டிருப்பதும், அங்கிருந்த சிலர் அவர் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்பதும் பதிவாகியுள்ளது.
கடும் விமர்சனங்கள்
இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்ற துல்லியமான தகவல் இல்லை என்றாலும், காணொளியில் பேசும் ரசிகர் ஒருவர் "நாம் 2-0 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளோம்" என்று குறிப்பிடுவதால், இது இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடைப்பட்ட ஓய்வு நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
🚨🚨 ECB has launched an investigation into English players beer-drinking for 6 days out of 9 during trip to Noosa just before 3rd test.
— Rajiv (@Rajiv1841) December 23, 2025
- This video is of Ben Duckett, he was found by Australians on streets of Noosa under huge infleunce of alcohol.
- After losing the 2nd test,… pic.twitter.com/Dsbn25VOKu
முக்கியமான தொடரின் போது வீரர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தை குறித்து பிரிதத்தானிய கிரிக்கெட் சபை (ECB) தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே ஏஷஸ் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வரும் பிரித்தானிய அணிக்கு, பென் டக்கெட்டின் இந்த காணொளி மேலும் பின்னடைவாகவும் விமர்சனத்துக்கு உள்ளாகவும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam