இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொறுக்க வேண்டுமென இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விசேட ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
நாளை பணிப்பகிஷ்கரிப்பு

“நாளை இடம்பெறவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள் அரச, அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெட்ரோல் கிடையாது.
பெட்ரோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் பொதுமக்களை அவர்களது வேலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் பாரிய பணியாற்றுகிறோம்.
| பத்தனை பகுதியில் ஆயிரம் லீட்டர் டீசல் மீட்பு(Photo) |
அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியல்

வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியலில் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கப்படவில்லை.
நாம் எரிபொருளை கடமை நேரத்தில் வரிசையில் நின்று பெறமுடியும். ஆனால் நாம் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்புவதற்கு கடமை விடுமுறையை யாரும் தரப்போவதில்லை.
நாம் பயணிகளை இடைநடுவில் விட்டுவிட்டு பெட்ரோல் நிரப்ப செல்ல முடியாதே. எமது சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமாக இருந்தால் எமது வாகனங்களுக்கு இரவு 6 மணிக்கு பின்னர் எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும்” என்றனர்.
| எரிபொருள் தட்டுபாடு: முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதிபத்திரம் |
| எரிபொருள் நிலையத்தில் குழப்பம்: பொலிஸாரை தாக்கிய இளைஞர்கள் (Video) |
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam