பத்தனை பகுதியில் ஆயிரம் லீட்டர் டீசல் மீட்பு(Photo)
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயிரம் லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
திம்புள்ள - பத்தனை பகுதியில் ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே பொலிஸாரால் இன்று(26) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
டீசல் மீட்பு
குறித்த வர்த்தக நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள - பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆயிரம் லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவர் நாளை (27) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
டீசலின் தேவை
இந்நிலையில் “நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே இந்த டீசல் சேமித்து வைக்கப்பட்டது." என கைது செய்யப்பட்டவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் இல்லை! வரிசையில் காத்திருப்பதால் பயனில்லை : வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
