கனேடிய பிரதமரின் கருத்துக்கு இலங்கை எதிர்ப்பு
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கறுப்பு ஜூலை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கனேடிய பிரதமரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ் இனவழிப்பு தினம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 23ம் திகதி இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார்.
போலியான தகவல்
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில், கனடா தொடர்ச்சியாக போலியானதும், திரிபுபடுத்தப்பட்டதுமான தகவல்களை வெளியிட்டு வருவதாக இலங்கை அரசாங்கத்தினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்ளுர் அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாகத் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் அனைத்து இனங்களுக்கும் இடையில் சமாதானத்தையும் ஏற்படுத்திக் கொள்ள கனடாவும் அதன் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.