தேசிய பிரச்சினைகளில் கவனத்தை செலுத்துங்கள்! ஹர்ஷ வலியுறுத்து
ஒருவரின் உடையில் ஏற்பட்ட தற்செயலான பிரச்சினைக்காக அவர்களைப் பார்த்து சிரிக்கும், முன்பு தேசிய பிரச்சினைகளில் கவனத்தை செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விடயத்தை தனது எக்ஸ் தள பதிவின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சட்டையில் உள்ள பொத்தான்களை சரிசெய்யும் சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
To laugh at someone because of an inadvertent issue with their dress, previously @RW_SRILANKA trouser belt or this time President @anuradisanayake shirt button is pathetic. Very low. Let us focus on national issues not petty personal issues.
— Harsha de Silva (@HarshadeSilvaMP) February 12, 2025
பொத்தான்களை சரிசெய்யும் காணொளி
பின்னர், அவர் பொத்தான்களை சரிசெய்யும் காணொளியும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே ஹர்சடி சில்வாவினால் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரு விழாவின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது காற்சட்டையை சரிசெய்யும் புகைப்படமும் இதேபோல பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)