ஜே.வி.பியுடன் கூட்டணி சேரத் தயாராகும் இலங்கை சுதந்திரக்கட்சி
ஜே.வி.பியுடன் கூட்டணி சேரத் தயார் என இலங்கை சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) இன்றைய தினம் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி போன்றதொரு ஊழல் மோசடிகளற்ற கட்சியொன்றுடன் இணைந்து செயற்படத்தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடதுசாரி சக்திகள் அனைத்தையும் அணி திரட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை சுதந்திரக்கட்சி கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி போன்ற தூய்மையான கட்சியொன்றுடன் சுதந்திரக்கட்சி போன்ற தூய்மையான கட்சி இணைந்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணியாக இணைந்து செயற்பட விரும்பினால் அதற்கும் தயார் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri