மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவு
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவானது, மரபு கடந்த ஒரு ஆட்சிக்கு வித்திட்டுள்ளது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(28.09.2024) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை வாழ் மக்கள்
“இது ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களினதும் துணிகரமான தீர்மானம் ஆகும்.
அந்த வகையில், ஊழலற்ற ஒரு தேசத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்ற முகவரியோடு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கையேற்றிருகின்ற ஜனாதிபதியாகிய தங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றுக் கொள்கின்றோம்.
மக்களதிகாரத்தின் ஊடாக ஆணைபெற்று அரச தலைவராக பதவியேற்றிருக்கின்ற தங்களுக்கு, சமூக பொருளாதார ரீதியில் சிதைவடைந்துள்ள இந்நாட்டை துரிதமாக சீரமைக்கும் தலையாய கடமைப் பொறுப்பு இருப்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.
இனப்பிரச்சினை
இந்த நாடு இந்நிலையை சந்திப்பதற்கு அடிப்படை காரணமாக அமைவது, நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினையும் அதனுடான யுத்தமும்தான்.

இவற்றுக்கான, காரணகாரியங்களை கண்டறிந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்நாட்டின் மீதான இதர தலையீடுகளை இல்லாது செய்து தேசத்தை அபிவிருத்தி நோக்கி கட்டியெழுப்ப முடியும். அதுவே காலத்தின் தேவையும் கூட” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        