பதுளையில் சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய உறவினர் கைது
பதுளையில் சிறுமி ஒருவரை கடுமையான தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுணுகலை - ஹொப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5 வயதும் 6 மாதமும் கொண்ட சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
தாயாரினால் முறைபாடு
குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அயல் வீடான சந்தேக நபரின் வீட்டுக்கு விளையாடுவதற்காக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கடந்த 23 திகதி குறித்த சிறுமியை சந்தேக நபர் தனது வீட்டில் அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்று தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 4 நாட்களாக தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி தாயாரிடம் கூறியதையடுத்து குறித்த சிறுமியின் தாயாரினால் நேற்றைய தினம் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
