சுற்றுலாத் துறையில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
2024 ஆம் ஆண்டின் தனிப் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கான விரும்பத்தக்க இடத்தை இலங்கை பெற்றுள்ளதாக சர்வதேச சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது தனிப் பெண் பயணம் அதிகரித்து வருகின்ற நிலையில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சுற்றுலா பயணம் செல்லும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாடு செல்வதைக் கருத்தில் கொண்டுள்ளனர்.
சாகசம், கலாசார மூழ்குதல் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை பெண்கள் அதிகம் தேடுவதாக குறித்த சஞ்கிகை தெரிவித்துள்ளது.
சிறந்த தேர்வு
“பல நாடுகள் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு நன்கு நிறுவப்பட்ட வழிகள், நட்பு உள்ளூர்வாசிகள், சமூக தொடர்பு மற்றும் அமைதியான தனிமை ஆகியவற்றுக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன.
இந்த தேர்வுகளை பொறுத்தவரை, 2024இல் தனிப் பெண் பயணிகளுக்கான சிறந்த தேர்வாக இலங்கை முன்னிலை வகிக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் ஒரு சிறு கண்ணீர்த் துளியாக அடிக்கடி வர்ணிக்கப்படும் இலங்கைத் தீவு, தெற்காசிய கலாசாரத்தின் சுவையை வழங்கும் அதே வேளையில் அதன் தனித்துவமான அழகை வெளிப்படுத்துகிறது.
யுனெஸ்கோவின் (UNESCO) பட்டியலிடப்பட்ட புராதன இடங்கள் ஏராளமாக இருப்பது இலங்கையின் தனிப் பெண் பயணிகளுக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
ஏராளமான வாய்ப்புகள்
சிகிரியாவின் பிரமிக்க வைக்கும் பாறைக் கோட்டை முதல் தம்புள்ளையின் அற்புதமான குகைக் கோயில்கள் வரை, நாட்டின் வளமான வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
வரலாற்று அற்புதங்களில் இருந்து ஓய்வு பெற விரும்பும் தனி பயணிகளுக்கு வசதியாக அழகிய கடற்கரைகள் மற்றும் கடற்கரை நகரங்களை இலங்கை வழங்குகிறது.
அறுகம்பே, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற இடங்கள் கடற்கரையோர தங்கும் விடுதிகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளுக்கும் ஓய்வெடுப்பதற்கும் பழகுவதற்கும் சரியான பின்னணியை வழங்குவதாக சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையான பிரச்சினையைத் திசை திருப்ப முயலும் இந்திய அரசியல் : கச்சதீவு தொடர்பில் பழ.நெடுமாறன் காட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |