யாழில் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துக்கொண்ட இப்தார் தின நிகழ்வு
வடமாகாண இப்தார் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கலந்துகொண்டனர்.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையினை மெளலவி ஏ.ம்.அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார்.
மரம் நடுகை நிகழ்வு
தொடர்ந்து, கெளரவ மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. இதன்போது, மரம் நடுகை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம
செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
ம.பற்றிக்றஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ்,திணைக்கள
உத்தியோகத்தர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துகொண்டனர்.












ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
