இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ள இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், 2025 ஜூன் 2 ஆம் திகதி முதல் அனைத்து மட்டங்களிலும் உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சித் திட்டத்தை நடத்தவுள்ளார்.
14 நாட்கள் நீடிக்கும் இந்த பயிற்சித் திட்டம், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு நடத்தப்படவுள்ளது.
இலங்கை வீரர்கள்
இதன்போது, இலங்கை பயிற்சியாளர்களும் பயிற்சித் திட்டத்தில் பரத் அருணுக்கு உதவுவார்கள்.

இந்திய பயிற்சியாளர் ஒருவர் இலங்கைக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக, பயணம் செய்வது இது முதல் முறை அல்ல, முன்பும் கூட, ஆர் ஸ்ரீதர், இலங்கையின் கிரிக்கெட் வீரர்களுக்கான அமர்வுகளை நடத்தியுள்ளார்.
இதேவேளை 62 வயதான பரத் அருண், இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam