நீதிமன்றில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர்களை, இலங்கை கிரிக்கெட் (SLC) ஊழியர்களாக உள்நாட்டு வருவாய் துறை (IRD) தன்னிச்சையாக வகைப்படுத்தியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குழுவினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர்களான சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் குறித்த ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.
இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களை தேசிய சங்கமான SLCஇன் ஊழியர்களாக உள்நாட்டு வருவாய் துறை தன்னிச்சையாகவும் நியாயமற்றதாகவும் ஒரே இரவில் வகைப்படுத்தியமை தொடர்பாக கிரிக்கெட் வீரர்களால் இந்த மனு முன்வைக்கப்பட்டது.
இடைக்கால உத்தரவு
இந்நிலையில், உள்நாட்டு வருவாய் துறையின் முடிவை இரத்து செய்ய அறிவிப்பு கோரியும், முடிவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.
வனிந்து ஹசரங்க, அஞ்செலோ மெத்யூஸ், மஹீஷ் தீக்சன, பதும் நிஸங்க, மற்றும் குசல் மெண்டிஸ் உள்ளிட்ட 38 தேசிய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதம் மார்ச் மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தவகையில், மனுதாரர்கள் சார்பாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வரலாற்று ரீதியாக சுயாதீன சேவை வழங்குநர்களாக நடத்தப்பட்டு வருவதாகவும், உண்மையில் அவர்கள் ஊழியர்களாகக் கருதப்பட முடியாது என்றும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் வீரர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் நிகழ்விலிருந்து, தேசிய கிரிக்கெட் வீரர்கள் கட்சிகளுக்கு இடையில் சுயாதீன சேவை வழங்குநர்களாகக் கருதப்பட்டுள்ளனர் என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
