தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் வெற்றி : இஸ்ரேல் ஊடகத்தில் அளிக்கப்பட்ட விளக்கம்
இஸ்ரேல், ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில், இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.
ஹமாஸ் ஆயத அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியுமா என்ற கேள்வி தொடர்பில் இஸ்ரேலிய ஊடகம் ஒன்றில் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகள்
இஸ்ரேலின் தாக்குதல்களினால் பெரும்பாலும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஜிஹாத் ஆகிய அமைப்புக்கள் செயலற்ற நிலைக்கு சென்றுள்ளன.
எனினும் கூட சர்வதேச ரீதியாக இஸ்ரேல் மீது சுமத்தப்படும், காசாவில் பட்டினியை ஏற்படுத்தியுள்ளமை உட்பட்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் அதன் வெற்றியை குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும் என்று, மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிபுணர் மோசே எலாட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பல்வேறு வழிகளில் திறம்பட அகற்றப்பட்ட நான்கு தீவிரவாத அமைப்புகளை எலாட் வரலாற்றிலிருந்து அடையாளம் காட்டியுள்ளார்.
ரஷ்யாவில், பிளக் கன்ட்ரட்ஸ் அமைப்பு இராணுவ மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் அடக்கப்பட்டது.
1990களில் கிட்டத்தட்ட பெருவின் சைனிங் பாத் தீவிரவாத அமைப்பு ஒழிக்கப்பட்டது. தானாகவே முன்வந்த ஜெர்மனியின் செம்படை பிரிவு கலைக்கப்பட்டது.
அதேநேரம் அரசியல் ரீதியாக சின் ஃபைனுடன் இணைந்த அரசியல் இயக்கமாக ஐரிஸ் குடியரசுக் கட்சி மாற்றம் பெற்றது.
எனினும் ஐந்தாவது உதாரணமான இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டமை விதிவிலக்கானது என்று எலாட் குறிப்பிட்டுள்ளார்.
2006 மற்றும் 2009க்கு இடையில்
தெற்காசியாவில் பல தசாப்தங்களாக மிகவும் உறுதியான ஆயுத அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, விரிவான மற்றும் தீவிரமான மற்றும் தார்மீக ரீதியில் ஒழிக்கப்பட்டதாக எலாட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் 26 ஆண்டுகால போரை மேற்கொண்டனர்.
இந்த அமைப்பினர், அதிநவீன இராணுவத் திறன்களை வளர்த்துக் கொண்டனர், அதன் அடிப்படையில் தற்கொலை குண்டுதாரிகளைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக இருந்தனர்.
இந்தநிலையில் 2006 மற்றும் 2009க்கு இடையில், இலங்கை அரசாங்கம், அந்த அமைப்புக்கு எதிராக, ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இராணுவத்தை கணிசமாக விரிவுபடுத்தவும், மேம்பட்ட ஆயுதங்களை வாங்கவும், ஆயிரக்கணக்கான வீரர்களை ஆட்சேர்ப்பு செய்யவும் வளங்கள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் பல முனைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இலங்கையின் சிறப்புப் படைகள் எதிரிப் பகுதிகளில் ஊடுருவல்களை மேற்கொண்டன.
இதற்கு இணையாக, விடுதலைப்புலிகளின் வெளிப்புற ஆதரவைத் தடுக்க அரசாங்கம் ஒரு வெற்றிகரமான இராஜதந்திர முயற்சியை மேற்கொண்டது.
அரசாங்கத்தின் வெற்றி சர்ச்சைக்குரிய வழிகளிலே..
புலம்பெயர்ந்தோர் நிதி வலையமைப்புகளை தடுக்க, குறிப்பாக கனடா, இங்கிலாந்து மற்றும் ஸ்காண்டிநேவியாவை குறிவைத்து, தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இலங்கை அரசாங்கம் வற்புறுத்தியது,
குழுவின் பல ஆதரவு கட்டமைப்புகளை மூடியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை விதைக்க தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.
தப்பியோடியவர்கள் உளவாளிகளாகவும் தகவல் கொடுப்பவர்களாகவும் சேர்க்கப்பட்டனர். ஆயினும்கூட, இந்த முயற்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்வியில் தீர்க்கமான காரணிகளாக இருக்கவில்லை என்று எலாட் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக, இலங்கை அரசாங்கத்தின் வெற்றியானது, சர்ச்சைக்குரிய வழிகளிலேயே மேற்கொள்ளப்பட்டது.
போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அதிலும் பலர் அறிவிக்கப்பட்ட "பாதுகாப்பான மண்டலங்களில்" வைத்து கொல்லப்பட்டனர்.
அத்துடன் இலங்கை இராணுவத்துக்கு எதிராக, மருத்துவமனைகளை குறிவைத்தல், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துதல் மற்றும் கைதிகள் காணாமல் போதல் உள்ளிட்ட போர்க்குற்றங்களை சர்வதேச அமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ளமையையும், மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிபுணர் மோசே எலாட் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகள்
2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மதிப்பீடுகள், சண்டையின் இறுதி மாதங்களில், குறிப்பாக ஜனவரி மற்றும் மே 2009 க்கு இடையில் 40,000 முதல் 70,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன.
எனினும், இலங்கை அரசாங்கம் இந்த எண்களை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை, பெரும்பாலான தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் உயிரிழந்ததாக அது வலியுறுத்தி வருவதாக எலாட் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப்போரின்போது, மனிதாபிமான அமைப்புகள் மோதல் மண்டலங்களிலிருந்து தடுக்கப்பட்டுள்ளன. செய்தியாளர்கள் தடை செய்யப்பட்டனர், சாட்சிகள் மௌனமாக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். சான்றுகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.சர்வதேச பதில் மௌனமாகவே இருக்கிறது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களிடமிருந்து சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகள் வந்த போதிலும், அவற்றை இலங்கை அரசு வெறுமனே நிராகரித்து வருகிறது.
எனவே, தீவிரவாத அமைப்பு ஒன்றின் முழுமையான தோல்வியின் அரிய மற்றும் முழுமையான நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ஒரு உதாரணம் என்று எலாட் கூறினார்.
அதாவது அந்த அமைப்பின் தோல்வி, கடுமையான மனிதாபிமான விலையின் விளைவாகும் என்று மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிபுணர் மோசே எலாட் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
