தோல்விகளுக்கு மத்தியில் மீண்டும் இங்கிலாந்தை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் அணி
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றிகளுக்கு மத்தியில் இங்கிலாந்து (England) அணி இன்று இலங்கை (Sri Lanka) அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்கிறது.
இந்தப்போட்டி லண்டன் (London) ஓவலில் நடைபெறுகிறது ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
மென்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி லோட்ஸில் 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை வீரர்கள்
குறித்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை வீரர்களும் சிறப்பாகவே செயற்பட்டனர்.
இதற்கிடையில் முதல் போட்டியில் தேய்மான பந்து ஒன்றுக்காக புதிய பந்து மாற்றப்பட்டமை குறித்து இலங்கை அணி, தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
இதேவேளை இன்று ஆரம்பாகவுள்ள டெஸ்ட்டில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வாவின் தலைமையில், தமித் கருணாரத்ன, பத்தும் நிசாங்க, குசல் மெண்டிஸ்,ஏஞ்சலோ மத்யூஸ், கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க, விஸ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
