இலங்கைக்கு சீன வழங்கியுள்ள வாக்குறுதி: அரசியல் விவகாரங்கள் குறித்து விசேட கவனம்
அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கைக்கான உதவிகளை வழங்கவும், ஏற்றுமதியை அதிகளவில் கொள்வனவு செய்யவும் சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் இன்று(20.10.2023) பீஜிங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
?? Chinese President Xi Jinping meets ?? Sri Lankan President Ranil Wickremesinghe in Beijing on Friday (20 Oct) morning.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) October 20, 2023
President Xi:
China stands ready to work with Sri Lanka to jointly promote high-quality Belt and Road cooperation and push for new progress in developing… pic.twitter.com/uPQle23PNq
சீனாவின் பட்டுப்பாதை திட்டம்
இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், பிராந்திய விவகாரங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்தநிலையில் இரு தரப்பும் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் இணக்கத்தை எட்டியுள்ளதாகவும் சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளுக்காக ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்களை மறுசீரமைக்கும் விடயம் தொடர்பிலும் சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.