இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் IMF
இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் எட்டியுள்ளன.
இந்த உடன்பாடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 330 மில்லியன் டொலரை, இரண்டாவது தவணையின் அடிப்படையில், இலங்கை பெற்றுக்கொள்ள உதவும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு
இந்த அனுமதியானது, இலங்கை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னைய நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதையும், கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றத்தையும் சார்ந்துள்ளது.
இதேவேளை "கடந்த ஜூன் மாத இறுதிப் பகுதி வரை திட்டத்தின் செயல்திறன் திருப்திகரமாக இருந்தது, அனைத்து அளவு செயல்திறன் அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்பட்டன.
வரி வருமானம்
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளில் வரி வருவாயைத் தவிர அனைத்து குறிப்பான இலக்குகளும் எட்டப்பட்டன" என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுவ தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.