மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என கட்சி உயர்பீடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதற்கு காரணமான உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்தே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பு
கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக அரசாங்கத்துடன் இணைந்து 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்க தீர்மானித்ததன் காரணமாக, உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சி பக்கம் நிற்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம், தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.