இலங்கையில் மூன்று புதிய சர்வதேச பல்கலைக்கழகங்கள்
இலங்கைக்குள் மூன்று சர்வதேசப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் தற்போது ஸ்தாபிப்பு கட்டத்தில் உள்ள நிலையில் மூன்றாவது பல்கலைக்கழகம் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கண்டியில் திறக்கப்பட உள்ளதோடு மற்ற இரண்டு பல்கலைக்கழகங்கள் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்த கிளைகளைக் கொண்டவையாகும்.
பல்கலைக்கழகங்கள்
இந்தநிலையில் அரச பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டங்களை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் 10 பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் கல்வி நிலைமையை அவதானித்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவார்கள் எனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
