இலங்கையில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள் : வெளியான காரணம்
இலங்கையில் வறட்சி மற்றும் சீரற்ற மழையினால் விளைச்சல் குறைந்து வரும் நிலையில் நாட்டின் வருமானம் பாரியளவில் சுருங்குவதால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இந்த பின்னடைவைக் கட்டியெழுப்ப முயற்சித்தாலும், 2022இல் ஏற்பட்ட கடுமையான அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை மோசமான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், “சீராக மழை பெய்யாததால், விவசாயி ஒருவரின் குடும்பம் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப சூழ்நிலை
குடும்ப வன்முறை என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு சிறிய பக்க விளைவு ஆகும். குறிப்பாக ஏழ்மையான நாடுகளில் அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகள், வறட்சிகள், வெள்ளம் மற்றும் புயல் என்பன பொருளாதார நெரக்கடிகளை அதிகப்படுத்தும், இது கோபத்தையும் வன்முறையையும் தூண்டும். தோல்வியடைந்த அறுவடைகள் மற்றும் இழந்த வருமானம் காரணமாக குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்றன.
இதன்போது குடும்ப ஆண்கள் தமது கோபத்தை குடும்ப உறுப்பினர்கள் மீது வெளிப்படுத்துகிறார்கள், பெரும்பாலும் பெண்களே இந்த வன்முறையின் சுமைகளைத் தாங்குகிறார்கள்.
உணவு கொள்வனவு அல்லது குழந்தைகளின் கல்வி அல்லது விவசாய செலவுகள் தொடர்பான சிறிய பிரச்சினைகள் கூட விவாதிக்கப்பட வேண்டியிருக்கும் போது, ஆண்கள் தங்கள் மனைவிகளை துன்புறுத்தும் ரீதியிலான குடும்ப வன்முறை பதிவுகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இரண்டு மடங்காகும் வன்முறை
குறித்த ஆய்வுகளின்படி, 2050ஆம் ஆண்டளவில் வெள்ளம் அல்லது வறட்சியின் அடிப்படையில் மிதமான அல்லது கடுமையான வெப்பப் பகுதிகளில் சுமார் 19 மில்லியன் இலங்கையர்கள் வாழ்வார்கள். 2019 ஆம் ஆண்டில், இலங்கையின் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தனது முதல் தேசிய கணக்கெடுப்பை மேற்கொண்டது.
இதன்போது உடல் ரீதியான வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டது.
ஏறக்குறைய 40 சதவீதம் பேர் உடல், பாலியல், உணர்ச்சி அல்லது பொருளாதார வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர் சமூக அழுத்தம் மற்றும் அவப்பெயருக்கு பயந்தும், குடும்பத்தை சீர்குலைக்க விரும்பாத காரணத்தாலும் பெண்கள் வன்முறையை வெளியிடுவதில்லை என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |