யாழில் ஐஸ்கிறீம் நிலையமொன்றின் முகம் சுழிக்கவைக்கும் செயல் : கோப்பையிலிருந்த தவளை
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14.02.2024) ஐஸ்கிறீம் உட்கொள்ள சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரிவித்ததையடுத்து குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகளவான வெப்பமான காலநிலை நிலவுவதால் சந்நிதி ஆலயத்துக்குச் செல்வோர் குளிர்பானங்களை அருகில் உள்ள உணவங்கள் மற்றும் குளிர்களி விற்பனை நிலையங்களிலேயே கொள்வனவு செய்து பருகி வருகின்றனர்.
அந்நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் குளிர்களி விற்பனை நிலையங்களின்
சுகாதாரம் மற்றும் நீரின் தூய்மை என்பவை தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள்
கவனம் செலுத்தி, சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
