ரணில் - சஜித் தரப்பு இணைந்து செயற்பட வேண்டும்! மயந்த திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறிச் செல்லும் எவ்வித எண்ணங்களும் கிடையாது.
புரிந்துணர்வு உடன்படிக்கை
இரண்டு கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் ஊடாக இணைந்து செயற்படுவதே உசிதமானது என்பது எமது நிலைப்பாடு.
இரண்டு கட்சிகளினதும் கொள்கைகள் ஒன்று என்பதனால், அதன் நலன்கள் வேறும் தரப்பிற்கு செல்லக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடும்போக்குவாத சக்திகளுக்கு மறைமுகமாகவேனும் ஆதரவு வழங்குவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மயந்த திஸாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
