விலங்குகளை சுடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் தேவை: ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை
பயிர்களை அழிக்கும் விலங்குகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதற்கு, அமைச்சர் லால்காந்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பயிர்களை அழிக்கும் பல்வேறு விலங்குகளை சுட அனுமதிக்கும் சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும், எனினும், இந்த சுடும் சட்ட ஏற்பாடுகள், விலங்குகளை கொல்வதற்காக அல்லாமல் விரட்டுவதற்கு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜயமஹா இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம்
முன்னதாக, விலங்குகளை விரட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட வேண்டும் என்று தாம் முன்மொழிந்த போது, தாம் கேலிக்குள்ளானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, தாம் இந்த யோசனையை கொண்டு வந்த போது பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவே தம்மை கேலி செய்தததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மக்கள் பயிர்களை அழிக்கும் விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் லால்காந்தவே தற்போது முன்மொழிந்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
