ரஷ்யாவை நெருங்கும் ஆபத்து: மேற்கத்திய துருப்புக்களுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு
ரஷ்யாவுடனான மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைனில் மேற்கத்திய துருப்புக்களை நிலைநிறுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டமானது உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான ஒரு படியாக இருக்கும் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய மோதல்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க ஜெலென்ஸ்கி இராஜதந்திர வழியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரும் நோக்கோடு கடந்த சனிக்கிழமை ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, உக்ரைனில் புடினின் படைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
மேலும், அந்த ஆபத்தான போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்ற கருத்தை நான் உருவாக்குகிறேன், என்றும் அவர் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |