அரசாங்கத்தில் இணையும் ஐ.மக்கள் சக்தியின் எம்.பிக்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்க தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி, சுகாதார அமைச்சுக்கள் வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.
அமைச்சரவையை நியமிப்பதில் ஏற்படடுள்ள சிக்கல்
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அந்த கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இவர்கள் 12 பேருக்கு அமைச்சு பதவிகளை வழங்கினால், ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்படும்.
இந்த சிக்கல் நிலைமை காரணமாக நிரந்தரமான அமைச்சரவை நியமிக்கப்படுவது மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.
ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சு பொறுப்பு
ஏனைய கட்சிகளை சேர்ந்த ஜீவன் தொண்டமான், அதாவுல்லா, ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
