ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) தனது ஆதரவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி அறிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) - பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
"இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை.
மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள்.
கிறிஸ்தவ மத விவகாரங்கள்
தனியொரு உறுப்பினராக நாடாளுமன்றத்தில் செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி முழு நாட்டினதும் வெற்றியாக அமையும்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவு" என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ். மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்கள் இணைப்பாளராக விக்டர் ஸ்டான்லியை நியமித்துள்ளார்.