தமிழர்களின் வாக்குகளை பறிக்க சஜித் தரப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வி : ரணில் சுட்டிக்காட்டு
தமிழ் மக்களின் வாக்குகளை என்னிடமிருந்து பறிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் கூறுகையில், நாம் நல்லது கெட்டது ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொள்வோம், சிலரைப் போன்று நாம் கடந்த காலத்தை மறந்து விட மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒன்றிணைந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும், நாம் நாட்டைக் காப்பாற்றியதனால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அனுரவும் சஜித்தும் தப்பிச் சென்றனர் , நாம் நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் ஜனநாயக நாடு இருந்திருக்குமா என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் எப்படியாவது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுத்தோம், நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய நான் முன் வந்தேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
